Skip to main content

மாநபியின் புகழ் பாடுவோம்


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் "அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஸஹிஹுல் புகாரி

************************************************************************************************************************************

ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1)
இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை  குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2)
நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3)
அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

Comments