நல்ல நண்பன் கஸ்துரி வியாபாரியை போன்றவன்... நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நல்ல நண்பன் நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும். தீய நண்பன் , கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம். நபி தோழர்: நல்ல நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது? நபி (ஸல்): நீங்கள் இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர். மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உ...
Comments
Post a Comment